/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேசிய நெடுஞ்சாலையில் இரு பஸ்கள் மோதல்; தமிழக- கர்நாடகா போக்குவரத்து பாதிப்பு தேசிய நெடுஞ்சாலையில் இரு பஸ்கள் மோதல்; தமிழக- கர்நாடகா போக்குவரத்து பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் இரு பஸ்கள் மோதல்; தமிழக- கர்நாடகா போக்குவரத்து பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் இரு பஸ்கள் மோதல்; தமிழக- கர்நாடகா போக்குவரத்து பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் இரு பஸ்கள் மோதல்; தமிழக- கர்நாடகா போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 11, 2025 09:13 PM

கூடலுார்; முதுமலை, அபயராணயம் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், கர்நாடகா அரசு பஸ், சுற்றுலா பஸ் மோதிய விபத்தால், இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, நேற்று காலை ஊட்டிக்கு புறப்பட்ட கர்நாடக அரசு சொகுசு பஸ், மதியம் தமிழக -கர்நாடக எல்லையான கக்கனல்லாவை கடந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக கூடலுார் நோக்கி வந்தது.
மதியம், 3:15 மணிக்கு முதுமலை புலிகள் காப்பகம் அபயராண்யம் அருகே, கர்நாடகா அரசு பஸ்சும், எதிரே வந்த தனியார் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.
அதில், பஸ்சின் முன் கண்ணாடிகள் சேதமடைந்தன. விபத்தில், பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விபத்து காரணமாக, இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மசினகுடி போலீசார் வந்து, வாகனங்களை அப்புறப்படுத்தி, 4:00 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.