Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

ஊட்டியில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

ஊட்டியில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

ஊட்டியில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

ADDED : மார் 24, 2025 10:46 PM


Google News
Latest Tamil News
ஊட்டி; ஊட்டியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, காசநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார். ஊட்டி ரயில் நிலையம் முன் துவங்கிய பேரணி காபி ஹவுஸ் வழியாக தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை சென்றது. பேரணியில் காச நோய்க்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

நீலகிரியில் காசநோய் எளிதில் பாதிக்கப்படக்கூடிய, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், எச்.ஐ.வி-யால் பாதிக்கபட்டவர்கள், புற்று நோயாளிகள், புகைப்பிடிப்பவர்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள் மற்றும் கடந்த காலங்களில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நடமாடும் 'எக்ஸ்-ரே' வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது.

ஊட்டி மருத்துவக்கல்லுாரி முதல்வர் கீதாஞ்சலி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ பணிகள் துணை இயக்குனர் கனகராஜ் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் சபரீசன் ஆகியோர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us