/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலையின் நடுவே மரம் அடிக்கடி விபத்து சாலையின் நடுவே மரம் அடிக்கடி விபத்து
சாலையின் நடுவே மரம் அடிக்கடி விபத்து
சாலையின் நடுவே மரம் அடிக்கடி விபத்து
சாலையின் நடுவே மரம் அடிக்கடி விபத்து
ADDED : ஜூன் 13, 2025 09:18 PM

குன்னுார்; குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் விரிவாக்க பணிகள் நடந்தன. அதில், சின்ன குரும்பாடி மற்றும் புதுக்காடு அருகே இரு இடங்களில் சாலையின் நடுவே உள்ள பலா மரத்தை சுற்றி சாலை செப்பனிடப்பட்டது.
வளைவுகள் உள்ள இந்த பகுதியில், இதனை சுற்றி எந்த ஒரு அறிவிப்பும் வைக்கப்படாமல் உள்ளது. வளைவான பகுதியாக உள்ளதால், இரவில் கீழே இறங்கும் வாகனங்கள், மரத்தில் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, பெரிய விபத்துகள் ஏற்படாமல் இருக்க தேசிய நெடுஞ்சாலை துறை குறிப்பிட்ட பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.