/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 10, 2024 10:42 PM

ஊட்டி : ஊட்டி பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து துறை ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்,' உள்ளிட்ட, 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரியில், போராட்டத்தை முன்னெடுத்த, சி.ஐ.டி.யு.,-எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி.,- ஏ.டி.பி., உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயத்தில், எல்.பி.எப்., மற்றும் அதன் ஆதரவு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
நேற்று, மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், சி.ஐ.டி.யு. மண்டல தலைவர் கணேசன், பி.எம்.எஸ்., மண்டல தலைவர் தேவானந்த், ஏ.டி.பி., மண்டல செயலாளர் பிரபாகரன், சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் செபஸ்டீன் ஆகியோர் தலைமையில், 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஊழியர்களுடன், ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். ஊட்டி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பாதிக்காத வகையில் தற்காலிக டிரைவர், கண்டக்டர் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தை தொழிற்சங்கங்கள் இம்மாதம், 19ம் தேதி வரை ஒத்தி வைத்ததை அடுத்து, ஊழியர்கள் பணிக்கு திரும்ப உள்ளனர்.