/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்; சுற்றுலா தலங்கள் மூடல் எதிரொலி மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்; சுற்றுலா தலங்கள் மூடல் எதிரொலி
மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்; சுற்றுலா தலங்கள் மூடல் எதிரொலி
மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்; சுற்றுலா தலங்கள் மூடல் எதிரொலி
மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்; சுற்றுலா தலங்கள் மூடல் எதிரொலி
UPDATED : மே 26, 2025 11:13 PM
ADDED : மே 26, 2025 10:37 PM

குன்னுார், ;நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலா தலங்கள் மூடப்பட்ட நிலையில், மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில், அனைத்து சுற்றுலா ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன. கோடை சீசன் நிறைவு பெறாத நிலையில், மாவட்டத்திற்கு வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வந்த மலை ரயில், ஊட்டி - குன்னுார் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதேபோல, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற சிறப்பு மலை ரயிலிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்திருந்தது. முன்னதாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வந்த மலை ரயில் பாதையில் முழு ஆய்வுகள் மேற்கொண்டு, பாதிப்புகள் ஏதும் இல்லாத நிலையில், சற்று தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் ரயில் தாமதமானது.