Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பாஸ் சோதனைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் சுற்றுலா வாகனங்கள்

பாஸ் சோதனைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் சுற்றுலா வாகனங்கள்

பாஸ் சோதனைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் சுற்றுலா வாகனங்கள்

பாஸ் சோதனைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் சுற்றுலா வாகனங்கள்

ADDED : மே 19, 2025 08:47 PM


Google News
Latest Tamil News
கூடலுார்; முதுமலை, மசினகுடி சாலையில், இ--பாஸ் சோதனைக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பயணிக்கும் சூழல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் சோர்வடைகின்றனர்.

ஊட்டி, கொடைக்கானலுக்கு அதிக வாகனங்கள் வந்து செல்வதால் ஏற்படும் பெரும் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை தவிர்க்க, கடந்த ஆண்டு மே மாதம் முதல் இ--பாஸ் நடைமுறை வந்தது.

இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவுபடி, கோடை சீசனில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, தற்போது ஊட்டிக்கு வார நாட்களில், 6,500 வாகனங்கள்; வார இறுதி நாட்களில் 8,500 வாகனங்கள் வர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இ--பாஸ் சோதனைக்காக மாவட்டத்தில் ஐந்து சோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

கேரளா, கர்நாடகாவில் இருந்து கூடலுார் வழியாக, ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள், கூடலுார் சில்வர் கிளவுட் பகுதி; தெப்பக்காடு -மசினகுடி சாலை மசினகுடியில் செயல்பட்டு வரும் இ--பாஸ் சோதனை மையங்களில், சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், மலர் கண்காட்சி துவங்கியதில் இருந்து, சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அதில், மசினகுடி வழியாக ஊட்டிக்கு அதிக வாகனங்கள் செல்வதால், மசினகுடி இ--பாஸ் சோதனை மையத்தில், சோதனைக்காக சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் சோர்வடைகின்றனர்.

சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'வார விடுமுறை நாட்களில், இ--பாஸ் சோதனை பணியில், கூடுதல் ஊழியர்களை நியமித்தால், சுற்றுலா பயணிகள் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க முடியும். போக்குவரத்து நெரிசலும் குறையும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us