/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டி அருகே புலி இறப்பு; வனத்துறை விசாரணை ஊட்டி அருகே புலி இறப்பு; வனத்துறை விசாரணை
ஊட்டி அருகே புலி இறப்பு; வனத்துறை விசாரணை
ஊட்டி அருகே புலி இறப்பு; வனத்துறை விசாரணை
ஊட்டி அருகே புலி இறப்பு; வனத்துறை விசாரணை
ADDED : மே 30, 2025 11:30 PM

ஊட்டி : ஊட்டி அருகே, எட்டு வயதுடைய ஆண் புலி இறந்தது தொடர்பாக, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி வனக்கோட்டம் பைக்காரா வனச்சரகம், பைக்காரா நீர்வீழ்ச்சி பகுதியில், நடுவட்டம் காப்பு காட்டில், நேற்று முன்தினம், எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் புலி உடல்நலக்குறைவால் படுத்து இருந்துள்ளது.
அப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை அலுவலர்கள் கண்டறிந்து, மாவட்ட வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் கவுதம் முன்னிலையில், பாதிக்கப்பட்ட புலியை வனத்துறை கால்நடை மருத்துவர் குழுவினர் ஆய்வு செய்ததில், புலி இறந்து கிடந்ததாக தெரியவந்தது.
இதை தொடர்ந்து, ஆண் புலியின் உடலை, முதுமலை கள இயக்குனர் கிருபாசங்கர் மற்றும் மாவட்ட வன அலுவலர் கவுதம் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள், 12 பேர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்த பின்பு, அதே பகுதியில் எரிக்கப்பட்டது. வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.