/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மரம் விழுந்து மூன்று மாநில போக்குவரத்து பதிப்பு மரம் விழுந்து மூன்று மாநில போக்குவரத்து பதிப்பு
மரம் விழுந்து மூன்று மாநில போக்குவரத்து பதிப்பு
மரம் விழுந்து மூன்று மாநில போக்குவரத்து பதிப்பு
மரம் விழுந்து மூன்று மாநில போக்குவரத்து பதிப்பு
ADDED : ஜூன் 13, 2025 11:20 PM

கூடலுார்; நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. அதில், தொரப்பள்ளி அருகே முதுமலை - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், 5:00 மணிக்கு பெரியளவிலான மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், தமிழகம், கேரளா, கர்நாடக இடையே, இயக்கப்பட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன. கார்குடி வனச்சரக வன ஊழியர்கள், கூடலுார் தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றி, 6:00 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர்.