/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டி- பைக்காரா சாலையில் ஆட்டோ விபத்தில் மூவர் காயம்ஊட்டி- பைக்காரா சாலையில் ஆட்டோ விபத்தில் மூவர் காயம்
ஊட்டி- பைக்காரா சாலையில் ஆட்டோ விபத்தில் மூவர் காயம்
ஊட்டி- பைக்காரா சாலையில் ஆட்டோ விபத்தில் மூவர் காயம்
ஊட்டி- பைக்காரா சாலையில் ஆட்டோ விபத்தில் மூவர் காயம்
ADDED : ஜன 05, 2024 11:34 PM
ஊட்டி;ஊட்டி- பைக்காரா சாலையில் ஆட்டோ விபத்தில் மூன்றுபேர் காயமடைந்தனர்.
ஊட்டியிலிருந்து பைக்காராவிற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ, காமராஜர் சாகர் அணை பகுதியில் எதிரே வந்த பிக்-அப் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். போலீசார் மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
'ஊட்டியில் சில ஆட்டோ டிரைவர்கள் விதிகளை மீறி தொலை துாரத்துக்கு சுற்றுலா பயணிகளை ஆட்டோவில் ஏற்றி செல்கின்றனர்; இதனால், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்படுகின்றனர்,' என்ற புகார் இருந்து வரும் நிலையில், இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், ''ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து, 15 கி.மீ., வரை ஆட்டோக்கள் இயக்க அனுமதி உள்ளது. காமராஜர் சாகர் அணை பகுதியில் விபத்து ஏற்பட்ட ஆட்டோ எங்கிருந்து சென்றது என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். விதிமீறி ஆட்டோக்களை வெளி பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.