நிழற்குடையில் போதிய இருக்கைகள் இல்லை
நிழற்குடையில் போதிய இருக்கைகள் இல்லை
நிழற்குடையில் போதிய இருக்கைகள் இல்லை
ADDED : பிப் 12, 2024 01:25 AM
ஊட்டி;ஊட்டி ஏ.டி.சி., நிழற்குடையில் போதிய இருக்கைகள் இல்லாததால், பயணிகள் தரையில் அமரும் அவலம் தொடர்கிறது.
ஊட்டி ஏ.டி.சி., பஸ் நிறுத்தம் வழியாக, 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும், நூற்றுக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். மழை மற்றும் வெயிலுக்கு பயணிகள் ஒதுங்குவதற்கு ஏதுவாக, இங்கு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிழற்குடையில், போதிய இருக்கைகள் இல்லாததால், பெரும்பாலான பயணிகள், தரையிலும், படிக்கட்டுகளிலும் புழுதியில் அமர வேண்டிய அவலம் தொடர்கிறது. இதனால், வயதானவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இடம் நெருக்கடியில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் நிழற்குடையை விரிவுப்படுத்தி, போதுமான நவீன இருக்கைகள் அமைக்க, நடவடிக்கை எடுப்பது அவசியம்.