Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மனமிருந்தால் மானிய திட்டத்தில் தொழில்கள் ஏராளம் :பெண்கள் தொழில் முனைவோராக அழைப்பு

 மனமிருந்தால் மானிய திட்டத்தில் தொழில்கள் ஏராளம் :பெண்கள் தொழில் முனைவோராக அழைப்பு

 மனமிருந்தால் மானிய திட்டத்தில் தொழில்கள் ஏராளம் :பெண்கள் தொழில் முனைவோராக அழைப்பு

 மனமிருந்தால் மானிய திட்டத்தில் தொழில்கள் ஏராளம் :பெண்கள் தொழில் முனைவோராக அழைப்பு

ADDED : டிச 01, 2025 01:51 AM


Google News
ஊட்டி: தொழில் முனைவோராக பெண்கள் மாற தமிழக அரசால் அசத்தலான திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற, 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி தேவையில்லை, இந்த திட்டத்தின் கீழ், 10 லட்சம் வரை உள்ள தொழில்கள் (வியாபாரம், சேவை, மற்றும் உற்பத்தி) 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.2 லட்சம்) தொழில் தொடங்கலாம்.

பழங்குடியின பெண்கள் மேலும் இந்த திட்டத்தின் கீழ் பழங்குடியினர், பட்டியலினத்தவர், திருநங்கைகள் மாற்றுத் திறனாளிகள் விதவைகள், கைம்பெண்கள் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

இந்த திட்டத்தின் கீழ் கடன் தொகையை தேசிய வங்கிகள், தனியார் துறை வங்கிகள், சிறு நிதி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனம், தாட்கோ வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

என்னென்ன தொழில் நேரடி வேளாண்மை சார்ந்த தொழில்கள், பண்ணை சார்ந்த தொழில்கள், கட்டடம் மட்டும் கட்டுதல் தவிர்த்து, சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எந்த தொழிலையும் செய்யலாம். உதாரணமாக உற்பத்தி பொருட்கள் தயாரிக்கவும், வளர்ந்து வரும் தொழிலான குழந்தைகள் பராமரிப்பு நிலையம், வீட்டில் உணவு தயாரித்து விற்பனை செய்தல், சலவை நிலையம், யோகா, உடற்பயிற்சி நிலையம், அழகு நிலையம், ஊட்டச்சத்து நிலையம் போன்ற சேவை தொழில்களும் மற்றும் ஊட்ட சத்து உணவுப் பொருட்கள் பேக்கரி பொருட்கள், ஐஸ்கீரீம் லெமன் கிராஸ் எண்ணெய், வெட்டிவேர் எண்ணெய், சிறுதானிய உணவு பொருட்கள் எம்ப்ராய்டரி, பேப்பர் பிளேட், ஹைட்ரோ பானிக்ஸ் (மண்ணில்லா விவசாயம்), சத்து உருண்டைகள், பொம்மை பொருள்கள் போன்றவை தயாரிக்கவும் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க www.msmeonline.tn.gov.in/twees என்ற இணையதள முகவரியில் மகளிர் தொழில் முனைவோர் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்கள் பெறவும், கூடுதல் வழிகாட்டுதலுக்கும் 89255 33995, 89255 33996, 89255 33997 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us