/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'மாஸ்டர் பிளான்' சட்டத்தின் தளர்வால் நீலமலைக்கு பாதிப்பு! பேரிடர் பகுதியில் தொலைநோக்கு திட்டம் அவசியம் 'மாஸ்டர் பிளான்' சட்டத்தின் தளர்வால் நீலமலைக்கு பாதிப்பு! பேரிடர் பகுதியில் தொலைநோக்கு திட்டம் அவசியம்
'மாஸ்டர் பிளான்' சட்டத்தின் தளர்வால் நீலமலைக்கு பாதிப்பு! பேரிடர் பகுதியில் தொலைநோக்கு திட்டம் அவசியம்
'மாஸ்டர் பிளான்' சட்டத்தின் தளர்வால் நீலமலைக்கு பாதிப்பு! பேரிடர் பகுதியில் தொலைநோக்கு திட்டம் அவசியம்
'மாஸ்டர் பிளான்' சட்டத்தின் தளர்வால் நீலமலைக்கு பாதிப்பு! பேரிடர் பகுதியில் தொலைநோக்கு திட்டம் அவசியம்
ADDED : செப் 20, 2025 08:24 PM
குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நீலகிரி மேம்பாட்டு ஆணையம் அமைக்க, 1991ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., ஆட்சிக்கு வந்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ந்து, 1993ல் நீலகிரிக்கான 'மாஸ்டர் பிளான்' அறிவிக்கப்பட்டது. மாநிலத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்றான, 'மாஸ்டர் பிளான்' சட்டத்தில், மலை பகுதிகளில், 7 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது; 1,500 சதுரடி கட்டுமான பணிக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டது.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், இந்த விதிமுறைகளில் அரசால் ஏற்படுத்தப்பட்ட தளர்வால், பிரமாண்ட கட்டு மானங்கள் அதிகரித்து, மலை மாவட்டம், கட்டட காடாக மாறி வருகிறது.
அதில் உள்ள ஒரு விதிமுறை தளர்வின் படி, 5 ஏக்கர் நிலப்பரப்பு வரையில் அமையும் மனை பிரிவுகளுக்கு, மாவட்ட கலெக்டர் ஆய்வறிக்கை அடிப்படையில், கட்டட கலை எழில் நோக்கு கமிட்டியின் ஒப்புதல் பெற்று, சென்னைக்கு செல்லாமல், கோவை மண்டல அலுவலகத்தில் அனுமதி பெறலாம்.
இந்த வரம்பிற்கு மேல் உள்ள நில பயன் மாற்றத்துக்கு மட்டும், சென்னையில் உள்ள மலையிட பாதுகாப்பு குழுமமான ஹாகா ஒப்புதல் பெறவும் வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
இந்த தளர்வு, நீலகிரி மலை பகுதியில் சொகுசு பங்களாக்கள், சுற்றுலா விடுதிகளை கட்டும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களின் பணம் படைத்தவர்களுக்கு வசதியாக அமைந்து விட்டது.
மேலும், மாநிலத்தில் மிகவும் பேரிடர் அபாய பகுதியாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு, இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி வருவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி ஆவண மைய கவுரவ இயக்குநர் தர்மலிங்கம் வேணு கோபால் கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன் மாஸ்டர் பிளான் திட்டத்தில் கொண்டு வரப்பட்ட தளர்வு, அச்சுறுத்தலாக அமைந்து விட்டது.
குறிப்பாக, கட்டட அனுமதியில் பெரும் ஊழலுக்கு வழி வகுத்து வருகிறது. இங்குள்ள குன்னுார், கோத்தகிரியில் ஆபத்தான சரிவுகளில் அதிகளவில், வெளி மாநிலங்களை சேர்ந்த செல்வந்தர்கள், கட்டட விதிகளை மீறி கட்டுமானம் கட்டுவதற்கு சாதகமாக அமைந்து விட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, உள்ளூர் மக்களின் நலனுக்கான, மாஸ்டர் பிளான் சட்டத்தில் மீண்டும் மாற்றப்பட வேண்டும். சமீபத்தில் வெளியான, நீலகிரிக்கான பேரிடர் அறிவிப்பை கருத்தில் கொண்டு, கட்டட விதிகளில் மாற்றம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.