/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ விடுதிக்கு செலவு செய்யும் நகராட்சி கழிப்பிடத்தை பராமரிக்காத அவலம் விடுதிக்கு செலவு செய்யும் நகராட்சி கழிப்பிடத்தை பராமரிக்காத அவலம்
விடுதிக்கு செலவு செய்யும் நகராட்சி கழிப்பிடத்தை பராமரிக்காத அவலம்
விடுதிக்கு செலவு செய்யும் நகராட்சி கழிப்பிடத்தை பராமரிக்காத அவலம்
விடுதிக்கு செலவு செய்யும் நகராட்சி கழிப்பிடத்தை பராமரிக்காத அவலம்
ADDED : மே 23, 2025 07:02 AM
குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில், இலவச கழிப்பிடம் இல்லாமல் இருக்கும் ஒரே பஸ் ஸ்டாண்ட் குன்னுார் பஸ் ஸ்டாண்ட் ஆகும். இங்கு பஸ் ஸ்டாண்ட் பராமரிப்புக்காக அரசு, 1.19 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில், தங்கும் அறை விடுதிகளை பொலிவு படுத்திய நகராட்சி, இங்குள்ள கட்டண கழிப்பிடத்தை சீரமைக்க முன்வரவில்லை.
கதவுகள் உடைந்துள்ளதுடன், கடும் துர்நாற்றமும் வீசுகிறது. உள்ளே செல்லவும் பலரும் தயங்குகின்றனர். சில நேரங்களில், இரவு, 8:30 மணிக்கே பூட்டி விடுவதால், வெளிப்புற பகுதிகளை பலரும் அசுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது. ஒருவருக்கு, 10 ரூபாய் வசூலிக்க, அனுமதி கொடுத்துள்ள நகராட்சி சுகாதாரமாக வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.