ADDED : ஜன 24, 2024 11:53 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே, 115 கிலோ காபி கொட்டைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பந்தலுார் அருகே கடலக்கொல்லி பகுதியில் காபி தோட்டம் வைத்திருப்பவர் ஜோஜோ. இவர் காபி கொட்டைகள் பறித்து, தோட்டத்தில் உலர வைத்துள்ளார்.
அதில், காபி கொட்டைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. தோட்ட உரிமையாளர் நெலக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர்.
அதில், கடலக்கொல்லி பகுதியை சேர்ந்த சக்திவேல்,35, காபி கொட்டைகளை திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து, 115 கிலோ காபி கொட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் சக்திவேலை கைது செய்தனர்.