/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'செப்டிக் டேங்க்கில்' விழுந்த காட்டெருமை: மீட்க இரவில் போராடிய தீயணைப்பு துறை'செப்டிக் டேங்க்கில்' விழுந்த காட்டெருமை: மீட்க இரவில் போராடிய தீயணைப்பு துறை
'செப்டிக் டேங்க்கில்' விழுந்த காட்டெருமை: மீட்க இரவில் போராடிய தீயணைப்பு துறை
'செப்டிக் டேங்க்கில்' விழுந்த காட்டெருமை: மீட்க இரவில் போராடிய தீயணைப்பு துறை
'செப்டிக் டேங்க்கில்' விழுந்த காட்டெருமை: மீட்க இரவில் போராடிய தீயணைப்பு துறை
ADDED : ஜன 04, 2024 10:42 PM

குன்னுார்:குன்னுார் 'ஹேர்வுட்' குடியிருப்பு, 'செப்டிக் டேங்க்கில்' விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குன்னுார் அரசு ஊழியர்களின் குடியிருப்பு பகுதியான, 'ஹேர்வுட்' குடியிருப்பு பகுதியில் உள்ள 'செப்டிக் டேங்க்கில்' நேற்று மாலை, 5:00 மணிக்கு காட்டெருமை தவறி விழுந்தது.
தகவலின் பேரில், குன்னுார் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து முட்புதர்கள் மற்றும் மண் அகற்றி காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு, 8:30 மணிவரை அதனை மீட்க முடியவில்லை.
மக்கள் கூறுகையில்,'காட்டெருமையின் உடல் நிலை பாதித்திருந்த நிலையில் நடமாடி வந்தது. இங்குள்ள முட்புதர்களை அகற்ற கோரியும், நகராட்சி, பொதுபணி துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்,காட்டெருமை விழுந்தது. பாம்பு உட்பட பல்வேறு வனவிலங்குகளும் விஷ பூச்சிகளும் அதிகரித்துள்ளது. எனவே, இங்குள்ள புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.