/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சுற்றுலா வாகனங்கள் செல்ல தற்காலிக கட்டுப்பாடு: சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டம்சுற்றுலா வாகனங்கள் செல்ல தற்காலிக கட்டுப்பாடு: சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டம்
சுற்றுலா வாகனங்கள் செல்ல தற்காலிக கட்டுப்பாடு: சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டம்
சுற்றுலா வாகனங்கள் செல்ல தற்காலிக கட்டுப்பாடு: சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டம்
சுற்றுலா வாகனங்கள் செல்ல தற்காலிக கட்டுப்பாடு: சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டம்
ADDED : ஜன 07, 2024 12:36 AM

கூடலுார்:மசினகுடியில், சுற்றுலா வாகனங்களுக்கு தற்காலிக கட்டுப்பாடு விதித்ததை கண்டித்து, வாகன ஓட்டுனர்கள் சாலை மறியல்; வனச்சரக அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி பகுதியில், 200க்கும் மேற்பட்ட தனியார் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விபூதிமலைக்கு செல்லும் வழியில், செந்நாய் குட்டிகள் ஈன்றுள்ளதால், அப்பகுதியில் தனியார் சுற்றுலா வாகனங்களை இயக்க, நேற்று வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர்.
இதனால், அதிருப்தி அடைந்த, சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் காலை, 9:00 மணிக்கு மசினகுடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின், சாலை மறியலை கைவிட்டனர்.
தொடர்ந்து, மசினகுடி வனச்சரக அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வனச்சரகர்கள் பாலாஜி தயானந்தன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பேசிய டிரைவர்கள், 'சுற்றுலா வாகனங்கள் இயக்க தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிப்பதை தவிர்க்க வேண்டும். விபூதி மலைக்கு வாகனங்கள் இயக்க அனுமதிக்க வேண்டும். மீண்டும், சூழல் சுற்றுலா மூலம் சுற்றுலா வாகனங்கள் இயக்க வேண்டும்,' என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'விபூதிமலைக்கு இன்று (நேற்று), நாளை (இன்று) மட்டும் வாகனங்கள் இயக்கலாம். திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை தற்காலிகமாக வாகனங்கள் இயக்கக் கூடாது. பிரச்னை குறித்து அடுத்த வாரம் துணை இயக்குனர் உங்களை சந்தித்து பேசுவார்,' என்றனர்.
அதனை ஏற்க மறுத்த ஓட்டுனர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், துணை இயக்குனர் தலைமையில் கூட்டம் நடைபெறும் வரை, பழைய முறையில் வாகனங்களை இயக்க, வனத்துறையினர் அனுமதி வழங்கினர். அதனை ஏற்று, மாலை 3:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர்.