/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு: பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு: பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு: பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு: பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு: பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : ஜூன் 01, 2025 10:10 PM
கோத்தகிரி: கோத்தகிரி கிளை நுாலகத்தில், கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடந்தது.
மாநில அரசு நுாலகத்துறை மற்றும் கோத்தகிரி கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில், பள்ளிமாணவர்களுக்கான,கோடை விடுமுறை வகுப்புகள் நடந்தது.
கோடை விடுமுறையை பயனுள்ளதாக பயன்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு கணிதம், நுண்ணறிவு, வாசிப்பு, சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி, சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து, சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், பயிற்சி வகுப்பில் பங்கேற்ற, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் நுாலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். பயிற்சி வகுப்பு நிறைவு விழா கோத்தகிரி கிளை நுாலகத்தில் நடந்தது. வாசகர் வட்ட துணைத்தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சென்னை கிறிஸ்துவ கல்லுாரி, கோத்தகிரி கிளை சமுதாய கல்லுாரி முதல்வர் லெனின், நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் லிங்கன், வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,
மாவட்ட நூலக அலுவலர் வசந்த மல்லிகா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
வாசகர் வட்ட உறுப்பினர் அனுசியா வரவேற்றார். நெடுகுளா ஊர்ப்புற நுாலகர் ரமேஷ் நன்றி கூறினர்.