/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/திடீரென ரோடு போடும் பணி; வாகன ஓட்டிகள் அவதிதிடீரென ரோடு போடும் பணி; வாகன ஓட்டிகள் அவதி
திடீரென ரோடு போடும் பணி; வாகன ஓட்டிகள் அவதி
திடீரென ரோடு போடும் பணி; வாகன ஓட்டிகள் அவதி
திடீரென ரோடு போடும் பணி; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 03, 2024 11:46 PM

சூலூர் : சூலூரில், அறிவிப்பு இல்லாமல், திடீரென ரோடு போடும் பணி நடந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சூலூரில் இருந்து சூலூர் பிரிவு செல்லும் ரயில்வே பீடர் ரோட்டில், நேற்று காலை திடீரென ரோடு போடும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் துவக்கினர்.
வாகனங்கள் அதிகளவில் சென்று வரும் இந்த ரோட்டில் எந்தவித அறிவிப்பும் செய்யாமல் அவசர கதியில் ரோடு போடும் பணி நடந்ததால், இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வட புறத்தில் சோமனூர் பிரிவு வரையிலும், தென்புறம் தாலுகா அலுவலகம் வரையிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நின்றதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,' ரயில்வே பீடர் ரோடு சில மாதங்களுக்கு முன் தான் போடப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் போடப்படுகிறது. மில்லிங்கும் செய்யவில்லை. எந்த அறிவிப்பும் இல்லாமல், திடீரென போக்குவரத்தை நிறுத்திவிட்டனர்.
இரு புறமும் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கின்றன. அவசர வேலைகளுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோசமாக இருக்கும் ரோடுகளை போடாமல், நன்றாக இருக்கும் ரோட்டின் மீதே மீண்டும் ரோடு போடுகின்றனர்,'என்றனர்.