/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வன விலங்கு பிரச்னைக்கு தீர்வு காண வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு வன விலங்கு பிரச்னைக்கு தீர்வு காண வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
வன விலங்கு பிரச்னைக்கு தீர்வு காண வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
வன விலங்கு பிரச்னைக்கு தீர்வு காண வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
வன விலங்கு பிரச்னைக்கு தீர்வு காண வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
ADDED : செப் 01, 2025 10:11 PM

கூடலுார்; வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு காண கோரி, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அதன் கூட்டணி கட்சிகள், 48 மணிநேரம், வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.
கூடலுாரில், தி.மு.க., தவிர்த்து அதன் கூட்டணி கட்சிகளான, 'காங்.,-மா.கம்யூ.,-இ.கம்யூ.,-வி.சி.க., -இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,' உள்ளிட்ட எட்டு கட்சிகள் உள்ளடக்கிய, மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இணை ஒருங்கிணைப்பாளர் சகாதேவன் ( வி.சி.க.,) வரவேற்றார். கூட்டத்துக்கு தலைவர் அம்சா (காங்.,) தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர், வாசு (மா.கம்யூ.,) காங்., கட்சியின் மாநில பொது செயலாளர் கோஷி பேபி ஆகியோர் பிரச்னைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம்:
தேர்தலின் போது மாநில முதல்வர் அறிவித்தபடி, கூடலுார் நிலப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். கூடலுாரில், தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் வனவிலங்கு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். கோரிக்கை வலியுறுத்தி, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நவ., 17, 18 தேதிகளில், 48 மணி நேரம் கூடலுாரில் கடையடைப்பு, வேலை நிறுத்தம் போராட்டம் நடத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கூடலுார் நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ், முகமது கனி (இ.கம்யூ.,), அனிபா (ஐ.யூ.எம்.எல்.,), புவனேஸ்வரன் (வி.சி.க.,), சமீர் (மக்கள் ஜனநாயக கட்சி), சாதிக் பாஷா (மனித நேய மக்கள் கட்சி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.