/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்; திரளான பொதுமக்கள் பங்கேற்பு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்; திரளான பொதுமக்கள் பங்கேற்பு
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்; திரளான பொதுமக்கள் பங்கேற்பு
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்; திரளான பொதுமக்கள் பங்கேற்பு
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்; திரளான பொதுமக்கள் பங்கேற்பு
ADDED : செப் 16, 2025 09:53 PM

கூடலுார்; கூடலுார் ஆமைக்குளம் பகுதியில், நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.
கூடலுார் பாண்டியார் டான்டீ குடோன் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நெல்லியாளம் நகராட்சி, வருவாய் துறை சார்பில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு நெல்லியாளம் நகராட்சி கமிஷனர் சக்திவேல் தலைமை வகித்தார்.
கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன், நகராட்சி தலைவர் சிவகாமி ஆகியோர், முகாமை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், தாசில்தார் முத்துமாரி, நெல்லியாளம் நகராட்சி துணைத் தலைவர் நாகராஜ், கவுன்சிலர்கள் சேகர், புவனேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, நடந்து சிறப்பு முகாமில், பாண்டியர் டான்டீ, புளியம்பாறை, பால்மேடு, மரப்பாலம், ஆமைக்குளம் பகுதி மக்கள் திரளாக பங்கேற்று, பல்வேறு அரசின் திட்டங்களை பெறுவதற்கான மனுக்களை அளித்தனர்.