/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானை சாலையை கடக்கும் பகுதிகளில் சோலார் மின் விளக்கு யானை சாலையை கடக்கும் பகுதிகளில் சோலார் மின் விளக்கு
யானை சாலையை கடக்கும் பகுதிகளில் சோலார் மின் விளக்கு
யானை சாலையை கடக்கும் பகுதிகளில் சோலார் மின் விளக்கு
யானை சாலையை கடக்கும் பகுதிகளில் சோலார் மின் விளக்கு
ADDED : ஜூன் 30, 2025 10:08 PM

கூடலுார்; கூடலுார், அல்லுார்வயல் பகுதியில் யானைகள் சாலையை கடக்கும் இடங்களில் வனத்துறை சார்பில் சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது.
கூடலுார், பேபி நகர் மச்சிக்கொல்லி பகுதியில், 18ம் தேதி ஆறுமுகம் என்பவர் யானை தாக்கி உயிரிழந்தார். 'இதற்கு அப்பகுதியில் மின்விளக்கு இல்லாததும் ஒரு காரணம்,' என, கூறப்பட்டது. இதனை தவிர்க்க, அப்பகுதியில் வனத்துறை சார்பில் சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது.
அதே போன்று தொரப்பள்ளி அல்லுார் வயல் பகுதியில் அப்போது யானைகள் சாலை கடக்கும் இடங்கள் அடையாளப்படுத்தி அங்கு வனத்துறை சார்பில் புதிய சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.
வனத்துறையினர் கூறுகையில்,'பொதுமக்கள் பாதுகாப்பு, மனித - விலங்கு மோதலை தடுக்கும் வகையில் டி.எப்.ஓ., உத்தரவுப்படி, வனத்துறை சார்பில் இப்பகுதிகளில், சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டதுள்ளது,' என்றனர்.