Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீரோடை அருகே தொங்கும் சோலார் மின் வேலியால் 'ஷாக்' அபாயம்! இரவில் மின் சப்ளை கொடுப்பதால் அச்சத்தில் மக்கள்

நீரோடை அருகே தொங்கும் சோலார் மின் வேலியால் 'ஷாக்' அபாயம்! இரவில் மின் சப்ளை கொடுப்பதால் அச்சத்தில் மக்கள்

நீரோடை அருகே தொங்கும் சோலார் மின் வேலியால் 'ஷாக்' அபாயம்! இரவில் மின் சப்ளை கொடுப்பதால் அச்சத்தில் மக்கள்

நீரோடை அருகே தொங்கும் சோலார் மின் வேலியால் 'ஷாக்' அபாயம்! இரவில் மின் சப்ளை கொடுப்பதால் அச்சத்தில் மக்கள்

ADDED : செப் 15, 2025 09:12 PM


Google News
Latest Tamil News
பந்தலுார்: பந்தலுார் அருகே வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் உள்ள சோலார் மின்வேலியில், இரவில் மின் இணைப்பு கொடுப்பதால், வன விலங்குகள் மட்டுமின்றி மக்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் வனங்களுக்கு மத்தியில் கிராமங்கள் மற்றும் தோட்டங்கள் அமைந்துள்ளன. இதனால், யானைகள் கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தினசரி வந்து அச்சுறுத்தி வருவது அதிகரித்து உள்ளது.

யானை உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து, குடியிருப்புகள் மற்றும் விவசாய தோட்டங்களை காப்பாற்ற, வனத்துறை அனுமதியுடன், பொதுமக்கள் சோலார் மின் வேலிகளை அமைக்கின்றனர்.

தொங்கும் மின் வேலியால் பாதிப்பு இதனால், விவசாய பயிர்கள் மற்றும் குடியிருப்புகள் காப்பாற்றப்படும் சூழலில், சேரம்பாடி அருகே சப்பந்தோடு பகுதியில் வனத்திற்கு மத்தியில் செல்லும் சாலையோரம், தொங்கும் சோலார் வேலி அமைத்துள்ளதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

இங்குள்ள தனியார் தோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக சப்பந்தோடு, போத்துக்கொல்லி, கையுன்னி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் தார் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக பகல் நேரங்களில் மட்டும் வாகனம் மற்றும் மக்கள் நடந்து செல்வார்கள்.

இரவு நேரங்களில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் சாலையை ஒட்டி அமைந்துள்ள நீரோடையில் தண்ணீர் குடிக்க வரும் நிலையில், வாகனங்களில் மட்டுமே மக்கள் பாதுகாப்பாக சென்று வருகின்றனர்.

இரவில் செல்லவதில் சிக்கல் இந்நிலையில், நீரோடைக்கு செல்லும் முன்பாக பாலத்தை ஒட்டி சாலையோரம் தனிநபர்கள் சோலார் மின்வேலி அமைத்து உள்ளனர். பகல் நேரங்களில் வேலி கம்பிகள், ஒரு பக்கமாக கட்டி வைக்கப்படும் நிலையில் இரவு, 7:00 மணிக்கு மேல் சாலையின் குறுக்கே தொங்க விடப்பட்டு மின்சப்ளை வழங்கப்படுகிறது.

இதனால், இந்த வழியாக இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதுடன், வனவிலங்குகளும் தண்ணீர் குடிக்க வர முடியாமல் பாதிப்படையும் சூழல் உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் கோபமடையும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய தோட்டங்களை சேதப்படுத்தி, மனிதர்களை தாக்குவது அதிகரித்து வருகிறது.

மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்து, விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சோலார் வேலியை அகற்றி, பொதுமக்களுக்கும், வன விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும்,' என்றனர்.

சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் கூறுகையில், ''கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் யானைகள் வராமல் இருக்கு சேலார் மின் வேலிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, அங்குள்ள கிராமத்துக்கு யானைகள் வராமல் இருக்க தொங்கும் மின்வேலி அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. தற்போது, அங்குள்ள பாலத்தின் குறுக்கே இரவில் தொங்கும் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து, நேரடியாக இரவில் ஆய்வு செய்து, சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படு ம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us