Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஒரு சிகரெட் புகைப்பதால் வாழ்நாளில் 5 நிமிடம் குறையும்; உலக புகையிலை மறுப்பு தின பிரசாரத்தில் தகவல்

ஒரு சிகரெட் புகைப்பதால் வாழ்நாளில் 5 நிமிடம் குறையும்; உலக புகையிலை மறுப்பு தின பிரசாரத்தில் தகவல்

ஒரு சிகரெட் புகைப்பதால் வாழ்நாளில் 5 நிமிடம் குறையும்; உலக புகையிலை மறுப்பு தின பிரசாரத்தில் தகவல்

ஒரு சிகரெட் புகைப்பதால் வாழ்நாளில் 5 நிமிடம் குறையும்; உலக புகையிலை மறுப்பு தின பிரசாரத்தில் தகவல்

ADDED : ஜூன் 02, 2025 11:52 PM


Google News
கோத்தகிரி ; 'ஒரு சிகரெட் புகைப்பதால் ஒருவருடைய வாழ்நாளில் ஐந்து நிமிடம் குறைகிறது,' என, தெரிவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் மே, 31ம் தேதி உலக புகையிலை மறுப்பு தினம் நிகழ்வு நடத்த, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கோத்தகிரி பஸ் நிலையத்தில், தெருமுனை பிரசாரம் நடந்தது.

நகராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ, துண்டு பிரசுரம் வினியோகித்து பிரசாரத்தை துவக்கி வைத்து பேசியதாவது:

மற்ற போதை பொருட்களை விட, புகை பிடிப்பதால்தான் மரணம் அதிகமாக உள்ளது. ஒரு சிகரெட் புகைப்பது, ஒருவருடைய வாழ்நாளில், ஐந்து நிமிடத்தை குறைக்கிறது. சிகரெட் புகையில் உள்ள நிகோடின் என்ற ரசாயன பொருள், ஒரு கொடிய விஷமாகும். அது, பூச்சிக்கொல்லி மருந்தாக பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

சிகரெட் புகையில் மட்டும், 4,000 ரசாயன பொருட்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வு கூறுகிறது. அதில், 60 ரசாயன பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால், தலை சொட்டை விழுதல், ஆஸ்துமா, சர்க்கரை வியாதி, மாரடைப்பு போன்ற பல நோய்களுடன், புற்று நோயும் வருகிறது.

சிகரெட் பிடிப்பவரை விட, அருகில் இருந்து புகையை சுவாசிக்கும் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவம் கூறுகிறது. இதனால், பொது இடங்களில் புகை பிடிப்பதை, முழுமையாக தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையும், மற்றும் சட்ட நுணுக்கங்களை மக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரன், செயலாளர் கேசவன், நிர்வாகிகள் லியாகத் அலி, தாஜுதீன், ரோட்டரி கிளப் நிர்வாகி தேவராஜ் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகள் நாகேந்திரன் மற்றும் வாசுதேவன் உட்பட தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us