/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா: போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுசிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா: போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா: போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா: போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா: போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 02, 2024 10:37 PM

ஊட்டி;ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில், சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
கலெக்டர் அருணா நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''ஐ.நா., சபை, 2023- 24ம் ஆண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.
நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிறுதானியத்தின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கம்பு, வரகு, குதிரை வாலி, கேழ்வரகு, சாமை சோளம் மற்றும் தினை வகைகளை கொண்டு, உணவு பொருட்கள் தயார் செய்து, காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மக்கள் சிறுதானிய உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமாக வாழ வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், சமூக நலத்துறை சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்,' திட்ட மூலம், பாரம்பரிய உணவு போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற, ஏழு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியரில், மூன்று நபர்களுக்கு, 5,000, 6,000, 3,000 பரிசுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசார விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் துவக்கி வைத்தார்.
அதில், மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் தேவகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.