ADDED : செப் 19, 2025 08:28 PM
கூடலுார்; நடுவட்டம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கூடலுார் நடுவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்குள்ள ஆரம்ப பள்ளியில் படித்து வருகிறார். சிறுமியின் உறவினர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்த அறிந்த, சிறுமியின் தாய், கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, 53 வயதுடைய அந்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.