/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டி தாவரவியல் பூங்காவில் விதை சேகரிக்கும் பணி ஊட்டி தாவரவியல் பூங்காவில் விதை சேகரிக்கும் பணி
ஊட்டி தாவரவியல் பூங்காவில் விதை சேகரிக்கும் பணி
ஊட்டி தாவரவியல் பூங்காவில் விதை சேகரிக்கும் பணி
ஊட்டி தாவரவியல் பூங்காவில் விதை சேகரிக்கும் பணி
ADDED : ஜூன் 10, 2025 09:26 PM

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர் செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ஊட்டியில் தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி, 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த, 5 லட்சம் மலர் செடிகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டது. மேலும், 25 ஆயிரம் பூந்தொட்டிகளில் செடிகள் நடப்பட்டன. இதனால், கோடை சீசன் வண்ணமயமாக முடிந்தது.
இதையடுத்து பூங்காவில், 2-வது சீசனுக்கு மலர் நாற்றுகள் உற்பத்தி செய்வதற்காக செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
பணியாளர்கள் காய்ந்த மலர்களில் இருந்து விதைகளை சேகரித்து வருகின்றனர். 'சால்வியா, மேரிகோல்டு, பென்ஸ்டிமன், டெல்பீனியம், ஆஸ்டர், ஜீனியா,' உள்ளிட்ட மலர் செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அந்த விதைகளை பணியாளர்கள் தரம் பிரித்து காய வைக்கின்றனர். தொடர்ந்து தரமான விதைகள் நர்சரியில் விதைத்து பராமரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்கள் வளர்ந்த பின்னர் நடைபாதை ஓரங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. மேலும், பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய விதைகள் தரம் பிரித்து 'பேக்கிங்' செய்யப்படுகிறது.