/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலை ஓரத்தில் கடைகள்; வாகனம் நிறுத்த இடையூறு சாலை ஓரத்தில் கடைகள்; வாகனம் நிறுத்த இடையூறு
சாலை ஓரத்தில் கடைகள்; வாகனம் நிறுத்த இடையூறு
சாலை ஓரத்தில் கடைகள்; வாகனம் நிறுத்த இடையூறு
சாலை ஓரத்தில் கடைகள்; வாகனம் நிறுத்த இடையூறு
ADDED : அக் 09, 2025 11:48 PM
கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு சந்திப்பில், தொடர்ந்து கடைகள் வைப்பதால், வாகனங்கள் நிறுத்த இடையூறு ஏற்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில், இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில், கோத்தகிரி - கட்டபெட்டுவழியாக, ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஏற்கனவே கட்டபெட்டு பஜாரில், வாகனங்கள் நிறுத்த போதுமான 'பார்க்கிங்' வசதி இல்லாத நிலையில், சாலையோரங்களில் நிறுத்துவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கட்டபெட்டு சந்திப்பில், சமவெளி பகுதியைச் சேர்ந்த பலர் கடைகள் வைப்பதால், வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தவிர, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கடைகளை வேறு இடத்தில் வைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


