/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புதர்கள் சூழ்ந்த சாலை வாகனங்கள் செல்வதில் சிக்கல் புதர்கள் சூழ்ந்த சாலை வாகனங்கள் செல்வதில் சிக்கல்
புதர்கள் சூழ்ந்த சாலை வாகனங்கள் செல்வதில் சிக்கல்
புதர்கள் சூழ்ந்த சாலை வாகனங்கள் செல்வதில் சிக்கல்
புதர்கள் சூழ்ந்த சாலை வாகனங்கள் செல்வதில் சிக்கல்
ADDED : ஜூன் 06, 2025 10:33 PM

பந்தலுார்,; பந்தலுார் அருகே முக்கட்டி மற்றும் பிதர்காடு பகுதியில் இருந்து, பென்னை, கரும்பன்மூலா, நம்பர் ஒன் காலனி மற்றும் பலாப்பள்ளி கிராமங்களுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த சாலையில், இரவு, 7:00 மணிக்கு மேல் யானை மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படும். இதனால், ஆட்டோ மற்றும் டூவீலர்கள் செல்வதிலும், மக்கள் நடந்து செல்வதிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
இந்நிலையில், சாலையில் இரண்டு பகுதியிலும் புதர்கள் வளர்ந்து, ஒரு வாகனம் செல்லும் போது எதிரே வரும் பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் இடம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. அத்துடன் வனவிலங்குகள் சாலை ஓரம் நின்றிருந்தாலும் தெரியாத நிலை ஏற்படுகிறது.
மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில், ஊராட்சி நிர்வாக மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்து, சாலை ஓரம் புதர்களை அகற்றி பாதிப்புகளை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.