/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கல்லட்டியில் பாறை விழுந்து சாலை சேதம்; மசினகுடி- ஊட்டி சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை கல்லட்டியில் பாறை விழுந்து சாலை சேதம்; மசினகுடி- ஊட்டி சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை
கல்லட்டியில் பாறை விழுந்து சாலை சேதம்; மசினகுடி- ஊட்டி சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை
கல்லட்டியில் பாறை விழுந்து சாலை சேதம்; மசினகுடி- ஊட்டி சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை
கல்லட்டியில் பாறை விழுந்து சாலை சேதம்; மசினகுடி- ஊட்டி சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை
ADDED : மே 27, 2025 07:35 AM

கூடலுார் : மசினகுடி-ஊட்டி சாலையில் கல்லட்டி பகுதியில் பாறை விழுந்து இரு இடங்களில் சாலை சேதமடைந்ததால், வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அவ்வப்போது சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மசினகுடி- ஊட்டி சாலையில், கல்லட்டி வன சோதனை சாவடி அருகே, நேற்று, இரண்டு இடங்களில், ராட்சத பாறைகள் விழுந்து சாலை சேதம் அடைந்தது.
வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சேதமடைந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், உதவி செயற் பொறியாளர் ராஜா, பொறியாளர் பிரகாஷ் ஆய்வு செய்து, வாகன போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதித்தனர்.
கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில், ''கல்லட்டி அருகே பாறை விழுந்து சாலை சேதமடைந்துள்ளது. இரவில் அதனை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


