/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேவகிரி பகுதியில் சாலை சேதம்; கண்டுகொள்ள யாருமில்லை தேவகிரி பகுதியில் சாலை சேதம்; கண்டுகொள்ள யாருமில்லை
தேவகிரி பகுதியில் சாலை சேதம்; கண்டுகொள்ள யாருமில்லை
தேவகிரி பகுதியில் சாலை சேதம்; கண்டுகொள்ள யாருமில்லை
தேவகிரி பகுதியில் சாலை சேதம்; கண்டுகொள்ள யாருமில்லை
ADDED : செப் 08, 2025 09:29 PM

பந்தலுார்; பந்தலுார் ஊட்டி நெடுஞ்சாலையில் பிளவு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மற்றும் பந்தலுார் பகுதியில் இருந்து ஊட்டி மற்றும் கேரளா மாநிலம் மலப்புரம், கர்நாடகா உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலையில், தேவகிரி என்ற இடத்தில் சாலையின் கீழ் பகுதியில் பெரிய அளவிலான பிளவு ஏற்பட்டு உள்ளதுடன், தொடர் மழையின் காரணமாக மண் சரிவும் ஏற்பட்டு உள்ளது.
இந்த பகுதியில் எச்சரிக்கை ரிப்பன்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ள நிலையில், சாலையோரம் சீரமைப்பதில் அதிகாரிகள் முனைப்பு காட்டாமல் உள்ளனர். அதே போல, பந்தலுார் முதல் தேவாலா வரை ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டு உள்ளது.
இதனையும் அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, மூன்று மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.