/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் தேங்கும் தண்ணீரால் நோய் அபாயம்ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் தேங்கும் தண்ணீரால் நோய் அபாயம்
ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் தேங்கும் தண்ணீரால் நோய் அபாயம்
ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் தேங்கும் தண்ணீரால் நோய் அபாயம்
ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் தேங்கும் தண்ணீரால் நோய் அபாயம்
ADDED : ஜூலை 14, 2024 01:12 PM

பந்தலுார்: பந்தலுார் பஜாரில் தேங்கும் தண்ணீரால் கொசுக்கள் பரவி நோய் பரவும் அபாயம் உள்ளது.
பந்தலுார் பஜார் பகுதியில் மழை நீர் மற்றும் கழிவுநீர் வழிந்து ஓட போதிய கால்வாய் வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
அதில், பஜாரில் இருந்து நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை, நீதிமன்றம் செல்லும் சாலையில், ஆட்டோ ஸ்டாண்ட் அமைந்து உள்ளது. இதனை ஒட்டி மழை நீர் மற்றும் அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது, டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் தேங்கி நிற்பதை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஆட்டோ டிரைவர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சுகாதார துறையினர் இப்பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.