/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அதிகரிக்கும் வெள்ள பெருக்கு; ஆற்றுக்கு செல்ல வேண்டாம் அதிகரிக்கும் வெள்ள பெருக்கு; ஆற்றுக்கு செல்ல வேண்டாம்
அதிகரிக்கும் வெள்ள பெருக்கு; ஆற்றுக்கு செல்ல வேண்டாம்
அதிகரிக்கும் வெள்ள பெருக்கு; ஆற்றுக்கு செல்ல வேண்டாம்
அதிகரிக்கும் வெள்ள பெருக்கு; ஆற்றுக்கு செல்ல வேண்டாம்

தாவரவியல் பூங்கா திறந்து மூடல்
கன மழை பெய்ததால், மாவட்ட முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் கடந்த, 25ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டது. நேற்று மதியம் திடீரென, 12:00 மணிக்கு ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது. 'மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி திறக்கப்பட்டது,' என, பூங்கா அதிகாரி பீபிதா தெரிவித்தார்.
கூடலுார்
கூடலுாரில் உற்பத்தியாகி கேரளா நோக்கி செல்லும் பாண்டியார்-புன்னம்புழா ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. அதேபோன்று நீலகிரியில் உற்பத்தியாகி முதுமலை புலிகள் காப்பகம் வழியாக,பவானி ஆற்றில் இணையும் மாயாறு ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பந்தலுார்
பந்தலுார் சேரம்பாடியில், 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேரம்பாடி பஜாரை ஒட்டிய சந்தனமாக்குன்னு கிராமத்திற்கு செல்லும் சாலை தாழ்வானபகுதியில் அமைந்துள்ளது. மழை வெள்ளம் செல்ல வழி இல்லாத நிலையில், ஒவ்வொரு மழை காலத்திலும் சாலை மற்றும் அதனை ஒட்டிய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படும். நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையால், கிராமத்திற்கு செல்லும் சாலையை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.