/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கிராமத்தை காப்பு காடாக மாற்ற வனத்துறை திட்டம் எதிர்ப்பு; ஆலோசனை கூட்டம் நடத்திய மக்கள் கிராமத்தை காப்பு காடாக மாற்ற வனத்துறை திட்டம் எதிர்ப்பு; ஆலோசனை கூட்டம் நடத்திய மக்கள்
கிராமத்தை காப்பு காடாக மாற்ற வனத்துறை திட்டம் எதிர்ப்பு; ஆலோசனை கூட்டம் நடத்திய மக்கள்
கிராமத்தை காப்பு காடாக மாற்ற வனத்துறை திட்டம் எதிர்ப்பு; ஆலோசனை கூட்டம் நடத்திய மக்கள்
கிராமத்தை காப்பு காடாக மாற்ற வனத்துறை திட்டம் எதிர்ப்பு; ஆலோசனை கூட்டம் நடத்திய மக்கள்
ADDED : ஜூன் 30, 2025 10:09 PM

கோத்தகிரி; கோத்தகிரி அஜ்ஜூர் கிராமத்தை வனத்துறை காப்புக்காக மாற்றும் முயற்சிக்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அஜ்ஜூர் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த, 200 ஆண்டுகளுக்கு மேலாக, கிராமத்தில் வசித்து வரும் மக்கள், வீட்டுமனை பட்டாவுடன், இருப்பு மற்றும் நில உரிமை உள்ளிட்ட ஆவணங்களை வைத்துள்ளனர்.
கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வனத்துறை வெளியேற்ற எதிர்ப்பு கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் கிராம மக்களுக்கு ஆதரவாக, மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து படுக கிராம மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனை அடுத்து, அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் கிராமத்தை காப்பு காடாக மாற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஒருங்கிணைந்த அஜ்ஜூர் கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கிராம பிரமுகர்கள், சிவன், மாதன் மற்றும் பொன்னா கவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாக்குபெட்டா நல சங்க நிர்வாகி கணேஷ் ராமலிங்கம், முன்னாள் தலைவர் ஐயாரு, ஓய்வு பெற்ற பேராசிரியர் குள்ளா கவுடர் மற்றும் குருத்துகுளி ராமையா ஆகியோர், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். மேலும், அடுத்தகட்ட முன்னெடுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், அஜ்ஜூர் கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.