/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கிராமத்தில் செந்நாய் நடமாட்டம்; உயிர் தப்பிய விவசாயி கிராமத்தில் செந்நாய் நடமாட்டம்; உயிர் தப்பிய விவசாயி
கிராமத்தில் செந்நாய் நடமாட்டம்; உயிர் தப்பிய விவசாயி
கிராமத்தில் செந்நாய் நடமாட்டம்; உயிர் தப்பிய விவசாயி
கிராமத்தில் செந்நாய் நடமாட்டம்; உயிர் தப்பிய விவசாயி
ADDED : ஜூன் 26, 2025 09:21 PM
கோத்தகிரி; கோத்தகிரி அருகே ஒன்னதலை கிராமத்தில், செந்நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஒன்னதலை கிராமத்தை சேர்ந்த விவசாயி கோபால் என்பவர், தனது தோட்டத்தில் இருந்து, கலிங்கனட்டி குறுக்கு பாதையில் நடந்து வீட்டுக்கு திரும்பி உள்ளார்.
அப்போது, ஏழு செந்நாய்கள் திடீரென அவரை சுற்றி நின்றுள்ளன. பீதி அடைந்த அவர், சப்தம் போட்டு ஓட முயற்சித்த போது தொடர்ந்து துரத்தியுள்ளன. கிராம மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் தேயிலை கொள்முதல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் விரைந்து சென்று, செந்நாய்களை துரத்தி கோபாலை பத்திரமாக மீட்டனர். மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர், செந்நாய்கள் உட்பட, வன விலங்குகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.