/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்: வீடு, வீடாக கொடுக்கும் பணி தீவிரம்ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்: வீடு, வீடாக கொடுக்கும் பணி தீவிரம்
ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்: வீடு, வீடாக கொடுக்கும் பணி தீவிரம்
ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்: வீடு, வீடாக கொடுக்கும் பணி தீவிரம்
ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்: வீடு, வீடாக கொடுக்கும் பணி தீவிரம்
ADDED : ஜன 04, 2024 10:54 PM
ஊட்டி:நீலகிரியில் வீடுகள் தோறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டு வருகிறது.
வரும், 22ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி ராமர் கோவிலில் பூஜிக்கப்பட்ட அட்சதை மற்றும். கோவில் படம் , கும்பாபிஷேக அழைப்பிதழ் ஆகியவற்றை அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று, ஹிந்து இயக்கத்தினர் கொடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில், கடந்த 1ம் தேதி பா.ஜ., சார்பில் இந்த பணி துவக்கப்பட்டது.
இவர்களுடன் ஹிந்து இயக்கங்கள், மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக சென்று அழைப்பிதழை கொடுத்து வருகின்றனர்.
மேலும், 22ம் தேதி மதியம், 12:00 மணிக்கு வீடுகள், கோவில்களில் ராமநாம ஜபம் செய்யவும், அன்று. மாலை, வீட்டு வாசல்களில் கார்த்திகை தீபங்கள் ஏற்றவும் வலியுறுத்தி ஹிந்து இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கூறுகையில்,''வீடுகள் தோறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கும் பணிகள் கடந்த, 1ம் தேதி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுவரை, 80 ஆயிரம் குடும்பங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இம்மாதம், 15ம் தேதிக்குள், நிர்ணயிக்கப்பட்ட, 2 லட்சம் குடும்பங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணிகள் நிறைவு செய்யப்படும்,'' என்றார்.