/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குடிநீர், விவசாய தேவைகள் முழுமை பெற மழை தொடர வேண்டும்!குடிநீர், விவசாய தேவைகள் முழுமை பெற மழை தொடர வேண்டும்!
குடிநீர், விவசாய தேவைகள் முழுமை பெற மழை தொடர வேண்டும்!
குடிநீர், விவசாய தேவைகள் முழுமை பெற மழை தொடர வேண்டும்!
குடிநீர், விவசாய தேவைகள் முழுமை பெற மழை தொடர வேண்டும்!

காலம் தவறி பெய்த மழை
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி மூன்று வாரங்கள் கடந்த நிலையில் மழை பொழிவு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழை சராசரி அளவு, 60 செ.மீ., இதுவரை, 18 செ.மீ., மழை பெய்துள்ளது. நடப்பாண்டில் ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை, 38 செ.மீ., மழை பெய்துள்ளது. ஆறு மாதங்களில், சராசரியாக, 60 செ.மீ., மழை பதிவாகி இருந்தால் மட்டுமே குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். மேலும், மலை காய்கறி மற்றும் தேயிலை தோட்டம் விவசாயத்திற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை கிடைத்திருக்கும்.
அதல பாதாளத்தில் அணைகள்
நடப்பாண்டில் இதுவரை, 38 செ.மீ., மழை பெய்துள்ளது. மழைக்கு ஓரளவு குடிநீர் தேவை பூர்த்தியானாலும், மாவட்டத்தில், 40 சதவீத பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மலை காய்கறிகளை பொறுத்தவரை கிணற்று நீரை நாட வேண்டிய நிலை ஏற்படவில்லை. தேயிலை தோட்டங்களில் ஓரளவுக்கு சீதோஷ்ண நிலை கிடைத்தாலும் உரமிட்டு பராமரிக்கும் அளவுக்கு மழை பெய்யவில்லை.