/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தொல்லை தரும் யானைகளை விரட்ட கோரி முற்றுகை போராட்டம் தொல்லை தரும் யானைகளை விரட்ட கோரி முற்றுகை போராட்டம்
தொல்லை தரும் யானைகளை விரட்ட கோரி முற்றுகை போராட்டம்
தொல்லை தரும் யானைகளை விரட்ட கோரி முற்றுகை போராட்டம்
தொல்லை தரும் யானைகளை விரட்ட கோரி முற்றுகை போராட்டம்
ADDED : ஜூன் 09, 2025 09:32 PM

பந்தலூர்; நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு சந்தக்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் ஜோய், 60, இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு காபி தோட்டம் வழியாக வந்துள்ளார். வீட்டின் அருகே தோட்டத்தில் மறைந்திருந்த, யானை தாக்கியதில் காயம் அடைந்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ பகுதிக்கு வந்து ஜோய்யை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வரும் வழியில் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மேலும், யானைகள் தினமும் ஊருக்குள் வருவதுடன், அடிக்கடி மனிதர்களை தாக்கி வரும் நிலையில், வனத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் அகழி அமைக்க வேண்டும்., கிராமங்களை ஒட்டி முகாமிட்டுள்ள யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் அடர் வனத்திற்குள் விரட்ட வேண்டும்.
உயிரிழந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை மற்றும் அரசு வீடு கட்டி தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்.எல்.ஏ. ஜெயசீலன் தலைமையில் பிதர்காடு பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு ஊர்வலம், முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, கூடுதல் கலெக்டர் சுரேஷ் கண்ணன், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, தாசில்தார் சிராஜூநிஷா, டி. எஸ். பி., ஜெயபாலன் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதில், 15.6 கி.மீ. அகழி அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் விரைவில் பணி தொடங்கப்படும்.
கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு யானைகளை துரத்தும் பணி மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்ட பின், மாலை, 4:00 மணிக்கு மக்கள் கலைந்து சென்றனர். எஸ்.பி.நிஷா மேற்பார்வையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.