பணி நிரந்தரம் கோரி மறியல் போராட்டம்
பணி நிரந்தரம் கோரி மறியல் போராட்டம்
பணி நிரந்தரம் கோரி மறியல் போராட்டம்
ADDED : செப் 24, 2025 11:42 PM
ஊட்டி: பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'ஒப்பந்த தொழிலாளர்கள் செய்யும் பணிக்கு வாரியம் நேரடியாக கூலி வழங்க வேண்டும்,' என்பன, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது.
ஊட்டி ரயில் நிலையம் எதிரே உள்ள மின்வாரிய அலுவலகம் முன், நேற்று முன்தினம் நடந்த போராட்டத்திற்கு, மின் ஊழியர் மத்திய அமைப்பின் நீலகிரி கிளை தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, மறியலில் ஈடுபட முயன்ற, 9 பெண்கள் உட்பட, 97 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி கிளை தலைவர் மணிகண்டன் கூறுகையில்,''மின்வாரியத்தில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இ.பி.எப்., பிடித்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியம் அடையாள அட்டை வழங்க வேண்டும்,'' என்றார். இணை செயலாளர் ரகுமான், குருசாமி, சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.