/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பந்தலுாரில் பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம் பந்தலுாரில் பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
பந்தலுாரில் பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
பந்தலுாரில் பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
பந்தலுாரில் பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 25, 2025 09:18 PM
பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் நடேசன் வரவேற்றார்.
அதில், கிராம தலைவர் ஏசையன் தலைமை வகித்து பேசியதாவது: எருமாடு அருகே வெட்டுவாடி பகுதியில் கடந்த, 1963 ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியில், அரசு சமையலர்களாக பணியாற்றியவர்களில், 30 பேருக்கு 150 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
இந்த நிலத்தை நில கொடியேற்ற கூட்டுறவு சங்கமாக மாற்றி, கூட்டுறவு சங்கத்தில் அங்கத்தினர்களாக மாற்றினர். ஏற்கனவே நிலம் வழங்கப்பட்டவர்களின் வாரிசுதாரர்களுக்கும் நிலம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கூட்டுறவு சங்கத்தில் பெறப்பட்ட கடன்கள் திரும்ப செலுத்தப்பட்டு, அதில் குடியேறியவர்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காகவும் நிலத்தை விற்பனை செய்தனர்.
அதில், தற்போது குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, தாசில்தார் முதல் நில நிர்வாக சீர்திருத்த ஆணையாளர் வரை தொடர்ந்து மனு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், வருவாய் துறையினர் நில அளவை செய்து ஆய்வு செய்தபோது, தற்போது அந்த நிலத்தில், 347 குடும்பங்கள் குடியிருப்பது தெரியவந்தது. அதில், முதல் கட்டமாக, 80 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால், 'தங்கள் அனுபவத்தில் இருக்கும் நிலத்திற்கு, முழுமையான பட்டா வழங்க வேண்டும்,' என, வலியுறுத்திய போது, 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, முன்னாள் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ஆனால், இதுவரை பட்டா கிடைக்கவில்லை. எனவே, எங்கள் பயன்பாட்டில் உள்ள இடத்திற்கு முழுமையாக பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் செவத்தையா, ஜடகோபன், பெரியவன், சிவராஜ் உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.
நிர்வாகி பிலிப் நன்றி கூறினார்.