Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ முன்னாள் படை வீரர்களுக்கு 'காக்கும் கரங்கள்' திட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கு 'காக்கும் கரங்கள்' திட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கு 'காக்கும் கரங்கள்' திட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கு 'காக்கும் கரங்கள்' திட்டம்

ADDED : மார் 23, 2025 09:44 PM


Google News
ஊட்டி : ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மாநில அரசு, 'காக்கும் கரங்கள்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தில், முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் மறுமணம் ஆகாத கைம் பெண்கள், மணமகாத கணவனை இழந்த மற்றும் கணவனை பிரிந்த முன்னாள் படை வீரர்களின் மகள்கள் பயன் பெறலாம்.

திட்டத்தின் மூலம், புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 சதவீதம் மூலதான மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். திட்டத்தின் மூலம், அதிகப்பட்சமாக, ஒரு கோடி ரூபாய் வரை வங்கி கடன் பெறலாம்.

திட்டத்திற்கான வழிமுறைகள்


முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்களுக்கு அதிகபட்ச வயது உச்சவரம்பு இல்லை. முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள், கைம்பெண்கள் மற்றும் பணியில் இறந்த படை வீரரின் மனைவிக்கு குறைந்தபட்சம், 21 வயது, அதிகப்பட்ச வயது உச்ச வரம்பு இல்லை.

படை வீரரின் திருமணமாகாத மகன் வயது வரம்பு, 25 க்குள் இருக்க வேண்டும். 25 வயதுக்கு மேல் உள்ளவர் எனில், முன்னாள் படை வீரர்கள் இணைந்து (கோ அப்லிகேன்ட்) பங்குதாரராக செயல்படலாம். அதில், முன்னாள் படை வீரர் முதன்மை விண்ணப்பதாரராக இருப்பார். பங்குதாரராக (பார்ட்னர்ஷிப்) இருத்தல் வேண்டும்.

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும். இதற்கு குறைந்தபட்ச படிப்பு தகுதி ஏதுமில்லை. திட்டத்தில் பயன்பெற வருமான வரம்பு ஏதும் இல்லை. திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் இது போன்ற திட்டங்களில் பயன் பெற்றிருக்க கூடாது. எனவே, திட்டத்திற்கு பயன்பெற விரும்பும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள், www.exweltn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஊட்டி கூட்ஷெட் சாலையில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது,0423-2444078 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us