/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பிரதமரின் கிசான் திட்டம்; விவசாயிகளுக்கு அழைப்பு பிரதமரின் கிசான் திட்டம்; விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதமரின் கிசான் திட்டம்; விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதமரின் கிசான் திட்டம்; விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதமரின் கிசான் திட்டம்; விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மே 30, 2025 11:23 PM
குன்னுார்: பாரத பிரதமரின் 'கிசான்' திட்டத்திற்கான சிறப்பு நிறைவு நிலை முகாமில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
குன்னுார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி கூறியதாவது:
பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டத்தின் கீழ் சொந்த நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டிற்கு, 3 தவணையாக தலா, 2000 ரூபாய் வீதம் ஆண்டிற்கு, 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிம்ஸ் பூங்கா அலுவலகத்தில், இன்று நிறைவு நிலை முகாம் நடக்கிறது. வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காத விவசாயிகள், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இதுவரை திட்டத்தில் பயன்பெறாத தகுதியுடைய விவசாயிகளை இணைத்திடவும், ஏற்கனவே பயன்பெற்று வந்த விவசாயிகளுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் இந்த முகாமில் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற்று வந்தவர் இறந்திருந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்டு, தற்போது அவர்களின் நிலம் மாற்றப்பட்டு, இத்திட்டத்தில் அவர்கள் வாரிசுதாரர்களின் பெயரில் இணையலாம்.
எனவே, விவசாயிகள் இந்த முகாமை பயன்படுத்தி பதிவு செய்து, வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத்தல்; நில விபரம் இணைத்தல் மற்றும் விவசாயிகளுக்காண தனிப்பட்ட அடையாள எண் போன்றவை பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.