/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானைகளின் சாணத்தில் 'பிளாஸ்டிக்' கழிவுகள்; வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி யானைகளின் சாணத்தில் 'பிளாஸ்டிக்' கழிவுகள்; வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
யானைகளின் சாணத்தில் 'பிளாஸ்டிக்' கழிவுகள்; வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
யானைகளின் சாணத்தில் 'பிளாஸ்டிக்' கழிவுகள்; வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
யானைகளின் சாணத்தில் 'பிளாஸ்டிக்' கழிவுகள்; வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
ADDED : செப் 14, 2025 10:29 PM

கூடலுார்; கூடலுாரின் விவசாய தோட்டங்களில் காணப்படும் யானை சாணத்தில் 'பிளாஸ்டிக்' கழிவுகள் இருந்ததால் வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதி யானைகளின் முக்கிய வாழ்விடம் மற்றும் வழித்தடமாக உள்ளது. உணவு தேடி விவசாய தோட்டதுக்குள் நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபகாலமாக இப்பகுதிகளில் விவசாய தோட்டத்துக்குள் வரும் யானைகளின் சாணத்தில், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் இருந்தது, வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'மனிதர்கள் தேவைக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை, திறந்த வெளியில் வீசி செல்கின்றனர். அதில் , பல உணவு கலந்த பிளாஸ்டிக் பைகளில் உப்பு சுவை இருப்பதால், அதனை யானைகள் உண்டு செல்கிறது. இதனால், அதன் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, வனத்துறையினர் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, பிளாஸ்டிக் கழிவுகளை திறந்து வெளியில் கொட்டுவது தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.
கால்நடை டாக்டர்கள் கூறுகையில், 'யானைகள், தொடர்ந்து அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகளை உண்டால், வயிற்றில் செரிமான பிரச்னை ஏற்பட்டு, உள் உறுப்புகள் பாதிக்கப்படும். உயிரிழக்கும் ஆபத்து உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை திறந்த வெளியில் வீசி செல்வதை தடுப்பதுடன், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'பிளாஸ்டிக் கழிவுகள் திறந்த வெளியில் வீசி செல்வதை பொதுமக்கள் தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனால், அதிகளவில் யானைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், சாலையோரங்களில் திறந்தவெளியில் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அகற்றி வருகிறோம். அனைத்து அரசு துறையினரும், ஒருங்கிணைந்து செயல்பட்டு, திறந்த வெளியில் பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளியில் வீசி செல்வதை தடுக்க வேண்டும்,'என்றனர்.