Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கோடை சீசனில் பல மடங்கு 'பிளாஸ்டிக்' அதிகரிப்பு குன்னுார் திடக்கழிவு மேலாண்மை நிகழ்ச்சியில் தகவல்

கோடை சீசனில் பல மடங்கு 'பிளாஸ்டிக்' அதிகரிப்பு குன்னுார் திடக்கழிவு மேலாண்மை நிகழ்ச்சியில் தகவல்

கோடை சீசனில் பல மடங்கு 'பிளாஸ்டிக்' அதிகரிப்பு குன்னுார் திடக்கழிவு மேலாண்மை நிகழ்ச்சியில் தகவல்

கோடை சீசனில் பல மடங்கு 'பிளாஸ்டிக்' அதிகரிப்பு குன்னுார் திடக்கழிவு மேலாண்மை நிகழ்ச்சியில் தகவல்

ADDED : ஜூன் 06, 2025 10:05 PM


Google News
Latest Tamil News
குன்னுார், ; ''குன்னுாரில் ஏப்., மே மாதம் கோடை சீசனில் மட்டும் பிளாஸ்டிக் புழக்கம் நான்கு மடங்கு அதிகரித்திருந்தது,'' என ,தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னுார் ஓட்டுப்பட்டறை திடக்கழிவு மேலாண்மை மையத்தில், நகராட்சியின் ஒத்துழைப்புடன் 'கிளீன் குன்னுார்' அமைப்பு குப்பை களை தனித்தனியாக தரம் பிரித்து, மறுசுழற்சி பணிகள் மேற்கொண்டு வருகிறது.

நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளில், தினமும், சேகரமாகும், 5 டன் மட்காத குப்பைகள், 8 முதல், 9 டன் வரை மட்கும் குப்பைகள், ஓட்டுப்பட்டறை அருகே உள்ள குப்பை குழியில், கொட்டப்பட்டு மறுசுழற்சி பணிகள் நடக்கிறது. அதில், 'பிளாஸ்டிக்' பிரித்தெடுத்து, எரிபொருளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குன்னுார் நகராட்சி மற்றும் கிளீன் குன்னுார் அமைப்பு சார்பில், 137வது லாரியில், 12.2 டன்எரிபொருளுக்கான, பிளாஸ் டிக் அரியலுார் சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்பட்டன. இதற்கான, நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் இளம்பரிதி, கிளீன் குன்னுார் அமைப்பின் உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் முன்னிலையில் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:

'பிளாஸ்டிக்' கழிவுகள் 'பைரோலிசிஸ்' எனப்படும் 'பர்னஸ்' எண்ணெய் எடுப்பதற்கு, எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகளில், 11 லட்சத்து 45 ஆயிரத்து 74 கிலோ, எரிய கூடிய மற்ற பிளாஸ்டிக் வகை, 4 லட்சத்து 88 ஆயிரத்து 881 கிலோவும் அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளான, 'பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்பதற்கான நல்ல அறிகுறியாக இந்த சாதனை உள்ளது. குன்னூர் போன்ற ஒரு சிறிய நகரத்திற்கு இந்த அளவு சற்று அதிகமாக உள்ளது. கொரோனா காலகட்டத்துக்கு பிறகு, பிளாஸ்டிக் பயன்பாடு இரு மடங்கு அதிகரித்துள்ளது.

நடப்பாண்டு, ஏப்., மே மாத கோடை சீசனில் மட்டும் நான்கு மடங்கு 'பிளாஸ்டிக்' பயன்பாடு அதிகரிப்பு காணப்பட்டது. மக்கள் நினைத்தால் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாடு குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us