/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிறப்பு முகாமில் திரளாக மக்கள் பங்கேற்று மனு சிறப்பு முகாமில் திரளாக மக்கள் பங்கேற்று மனு
சிறப்பு முகாமில் திரளாக மக்கள் பங்கேற்று மனு
சிறப்பு முகாமில் திரளாக மக்கள் பங்கேற்று மனு
சிறப்பு முகாமில் திரளாக மக்கள் பங்கேற்று மனு
ADDED : செப் 02, 2025 08:20 PM

கூடலுார்; கூடலுார், பந்தலுார் பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது; அரசு கொறடா ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
கூடலுார் நகராட்சி, 1, 2, 3வது வார்டுகளுக்கான, உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தேவர்சோலை சாலை முதல் மைல், என்.எஸ்., ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.
முகாமை, நகராட்சி தலைவர் பரிமளா துவக்கி வைத்தார். தாசில்தார் முத்துமாரி, நகராட்சி கமிஷனர் சுவேதாஸ்ரீ, துணைத் தலைவர் சிவராஜ் முன்னிலை வகித்தனர்.
* தேவர்சோலை பேரூராட்சி ஒன்று முதல் பதினோராவது வார்டுகளுக்கான, முகாம் தேவர்சோலை சி.எஸ்.ஐ., சர்ச் அரங்கில் நடந்தது. முகாமை பேரூராட்சி தலைவர் வள்ளி துவக்கி வைத்தார். செயல் அலுவலர் பிரதீப், துணைத் தலைவர் யூனுஸ்பாபு, வருவாய் அலுவலர் ரேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரளான மக்கள் மனுக்களை அளித்தனர்.
* பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு, கூடலுார் ஆர்.டி.ஓ. குணசேகரன் தலைமை வகித்தார். நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி, தாசில்தார் சிராஜுநிஷா, ஆணையாளர் சக்திவேல், முகாமை துவக்கி வைத்தனர். இதில் பொதுமக்கள் தங்களின் பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மாற்று திறனாளிகள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,திராவிடமணி உட்பட பலர் பங்கேற்றனர். வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.
-* சேரம்பாடியில் நடந்த முகாமில் ஊராட்சி செயலாளர் சோனிஷாஜி வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியம், இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி துவக்கி வைத்தனர். ஏராளமான மக்கள் மனு அளித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குப்புராஜ், பழங்குடியினர் நல தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி. ஜெயபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.