/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பயனற்ற பழைய வாகனங்கள் நிறுத்தம்; போக்குவரத்துக்கு இடையூறுபயனற்ற பழைய வாகனங்கள் நிறுத்தம்; போக்குவரத்துக்கு இடையூறு
பயனற்ற பழைய வாகனங்கள் நிறுத்தம்; போக்குவரத்துக்கு இடையூறு
பயனற்ற பழைய வாகனங்கள் நிறுத்தம்; போக்குவரத்துக்கு இடையூறு
பயனற்ற பழைய வாகனங்கள் நிறுத்தம்; போக்குவரத்துக்கு இடையூறு
ADDED : ஜன 03, 2024 11:47 PM

கூடலுார் : கூடலுார் நந்தட்டி பகுதியில் சாலையோரங்களில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ள, பயனற்ற பழைய வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கூடலுார் கோழிக்கோடு சாலை, செம்பாலா முதல் நந்தட்டி வரை சாலை ஓரங்களில், பயனற்ற மற்றும் பயன்படுத்த முடியாத பழைய வாகனங்களை சிலர் நிரந்தரமாக நிறுத்தி சென்றுள்ளனர். அந்த வாகனங்களை சுற்றி முட் புதர்கள் வளர்ந்துள்ளன.
இதனால், வாகனங்கள் இயக்கவும், மக்கள் சாலையோரம் நடந்து செல்லவும் சிரம்பட்டு வருகின்றனர்; வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், முற்புதர்களால், வாகனங்கள் பாம்புகள், விஷபூச்சிகள் இருப்பிடமாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள, வாகனங்களை அகற்ற வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'வாகன உரிமையாளர்கள், பயனற்ற பழைய வாகனங்களை, இப்பகுதி சாலை ஓரத்தில் நிறுத்தி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வாகனங்கள் சுற்றி முட்புதர்கள் வளர்ந்து இருப்பதுடன், வாகன போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது.
வாகன விபத்துக்கள் ஆபத்து உள்ளதால், நெடுஞ்சாலைத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்து, வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அப் பகுதி சாலை ஓரங்களில் புதிதாக ஆக்கிரமிப்பு செய்வதையும் தடுக்க வேண்டும்,' என்றனர்.