/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டியில் 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்த ஆய்வுக்கு உத்தரவு! விதிமீறலை கண்டறிந்தால் போலீசில் புகார் அளிக்க முடிவுஊட்டியில் 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்த ஆய்வுக்கு உத்தரவு! விதிமீறலை கண்டறிந்தால் போலீசில் புகார் அளிக்க முடிவு
ஊட்டியில் 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்த ஆய்வுக்கு உத்தரவு! விதிமீறலை கண்டறிந்தால் போலீசில் புகார் அளிக்க முடிவு
ஊட்டியில் 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்த ஆய்வுக்கு உத்தரவு! விதிமீறலை கண்டறிந்தால் போலீசில் புகார் அளிக்க முடிவு
ஊட்டியில் 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்கள் குறித்த ஆய்வுக்கு உத்தரவு! விதிமீறலை கண்டறிந்தால் போலீசில் புகார் அளிக்க முடிவு

விதிகளை மீறி கட்டுமானம்
இந்நிலையில், இங்கு மாஸ்டர் பிளான் சட்டத்தை மீறி கட்டப்படும் கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், அனுமதி பெற்ற பின், விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் உள்ளன.
சென்னை ஐகோர்ட் உத்தரவு
இந்நிலையில், சமீபத்தில் சென்னை ஐகோர்ட் உத்தரவில், ' மலை பகுதியில் அனுமதி இல்லாமல் நடக்கும் காட்டேஜ்கள் குறித்து, மாவட்ட கலெக்டர் தலைமையில்,வருவாய் அலுவலர், நகராட்சி, மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழகம் உள்ளிட்ட துறைகளை இணைத்து குழு அமைத்து, உரிய ஆய்வு செய்து 'சீல்' வைக்க வேண்டும்,' என, உத்தரவிட்டுள்ளது.
புகார் அளிக்க முடிவு
நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில், ''ஊட்டி நகராட்சியில், சில ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு விதிமீறல்களின் கீழ், 150க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. சீல் வைத்த பல கட்டடங்கள் திறக்கப்பட்டு செயல்படுவதாக புகார் வந்துள்ளது. நகராட்சி சார்பில் குழு அமைத்து அந்தந்த இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். சீல் உடைக்கப்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்,'' என்றார்.