/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மயானத்தில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு மயானத்தில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
மயானத்தில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
மயானத்தில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
மயானத்தில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
ADDED : செப் 21, 2025 10:44 PM
பந்தலுார்; பந்தலுார் அருகே மயானத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர், உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலுார் அருகே உப்பட்டி மேஸ்திரிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி,60. உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
தொடர்ந்து, அந்த பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள், இறந்தவர் உடலை அடக்கம் செய்ய குழி வெட்டும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, குழி வெட்டும் பணியில் ஈடுபட்டவர்களிடம், இதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் குடும்பத்துடன் வந்து, 'இந்த இடம், எங்களுக்கு சொந்தமானது; எனவே இந்த பகுதியில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கூடாது,' என, எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், 'இந்தப்பகுதி மயானம் என்பதால், அதே இடத்தில் தான் அடக்கம் செய்வோம்,' என, பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலின் பேரில், தாசில்தார் சிராஜுநிஷா, வி.ஏ.ஓ. மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர். அதில், 'ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் மயான பூமி,' என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, இறந்தவரின் உடல் அதிகாரிகள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.