/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ திறந்த ஆம்புலன்ஸ் கதவு; கீழே விழுந்த நோயாளி திறந்த ஆம்புலன்ஸ் கதவு; கீழே விழுந்த நோயாளி
திறந்த ஆம்புலன்ஸ் கதவு; கீழே விழுந்த நோயாளி
திறந்த ஆம்புலன்ஸ் கதவு; கீழே விழுந்த நோயாளி
திறந்த ஆம்புலன்ஸ் கதவு; கீழே விழுந்த நோயாளி
ADDED : ஜூன் 29, 2025 10:55 PM
குன்னுார்; குன்னுாரில் ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய தனியார் ஆம்புலன்சில் இருந்து, நோயாளி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னுார் ஓட்டுப்பட்டறை பகுதியில் இருந்து, கபிருல்லா என்பவரின் மனைவி, நேற்று முன்தினம் தனியார் ஆம்புலன்சில், குன்னுார் தனியார் எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த ஆம்புலன்ஸ் லெவல் கிராசிங் அருகே ஸ்பீடு பிரேக்கில் ஏறி இறங்கிய போது, நோயாளி ஸ்ட்ரக்சருடன் கீழே விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் நிறுத்தினார். அப்போது அவ்வழியாக நடந்து சென்றவர்கள் மற்றும் டிரைவர் ஆரிப் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த, வீடியோ காட்சி தற்போது வைரலாகி உள்ளது.
போலீசார் கூறுகையில்,' வாகனத்தின் புதிய டிரைவர், ஸ்ட்ரக்சர் மற்றும் பின் கதவை சரியாக லாக் செய்யாமல் கொண்டு வந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. தனியர் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,' என்றனர்.