/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில் மீண்டும் துவக்கம்ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில் மீண்டும் துவக்கம்
ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில் மீண்டும் துவக்கம்
ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில் மீண்டும் துவக்கம்
ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில் மீண்டும் துவக்கம்
ADDED : ஜன 12, 2024 11:27 PM
குன்னுார்:ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில் நேற்று துவங்கியது.
குன்னுாரில் கடந்த வாரம் கடும் மேகமூட்டத்துடன் கனமழை நீடித்தது. பல இடங்களில் மரங்கள் விழுந்து மண்சரிவும் ஏற்பட்டது. மலை ரயில் பாதையில் கடந்த, 9ம் தேதி மரங்கள் விழுந்ததால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வந்த மலை ரயில் தாமதமானது.
இதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய தினம் மதியம், ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 11ம் தேதி வரை இந்த ரயில் ரத்து செய்வதாக தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அதிகாரிகள் அறிவித்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் மலை ரயில் இயக்கம் தொடங்கியது. பொங்கல் விடுமுறை துவங்கி, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், மலை ரயிலில் செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.