/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பாறை விழுந்ததால் பாதிப்பு; ஊட்டி மலை ரயில் தாமதம்பாறை விழுந்ததால் பாதிப்பு; ஊட்டி மலை ரயில் தாமதம்
பாறை விழுந்ததால் பாதிப்பு; ஊட்டி மலை ரயில் தாமதம்
பாறை விழுந்ததால் பாதிப்பு; ஊட்டி மலை ரயில் தாமதம்
பாறை விழுந்ததால் பாதிப்பு; ஊட்டி மலை ரயில் தாமதம்
ADDED : ஜன 05, 2024 11:44 PM
குன்னுார்:குன்னுார் மலை ரயில் பாதையில் பாறை விழுந்ததால், ஒரு மணி நேரம் மலை ரயில் தாமதமானது.
ஊட்டி- மேட்டுப்பாளையம், - குன்னுார்- -ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்படுகிறது.
அதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, 7:10 மணிக்கு குன்னுார் வழியாக ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், நேற்று பர்லியார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், 27 மி.மீ., மழை அளவுக்கு மழை பாதிவாகி உள்ளது. மழையின் காரணமாக, ஹில்குரோவ் அருகே ரயில் பாதையில் பாறை விழுந்தது. முன்னதாக ஆடர்லி பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் பாறை கற்களை அகற்றி சீரமைத்தனர்.
இதனால், குன்னுாருக்கு காலை, 10:10 மணிக்கு வரவேண்டிய மலை ரயில், 11:10 மணிக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து, இந்த மலை ரயிலில் ஒரு பெட்டி கூடுதலாக இணைத்து, 5 பெட்டிகளுடன் ஊட்டிக்கு, 250 பயணிகளுடன் சென்றது.